(றிஸ்வான் சாலிஹூ)
சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று (23) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று, நகர் பிரிவு –05ஆம் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் மீதே நேற்று (22) இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்ற போது சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல், வாக்குமூலம் இணைக்கப்பட்டுள்ளது (வீடியோ)
Reviewed by Editor
on
April 24, 2020
Rating:
Reviewed by Editor
on
April 24, 2020
Rating:
