(பிர்னாஸ் இஸ்மாயில் - SLAS)
இன்று சர்வதேச புவி தினம் ஆகும். ஏனைய சர்வதேச தினங்களைப் போல இத்தினமும் உலகளாவிய ரீதியில் மனிதர்களால் அனுஷ்டிக்கப்பட்டாலும் இவ்வருடம் அவ்வாறு அனுஷ்டிக்க முடியவில்லை. அதற்கு இவ்வருடம் புவித்தாய் இடங் கொடுக்கவில்லை.
ஆனால் மிருகங்களாலும், ஏனைய உயிரினங்களாலும் இன்று மிக அமைதியாக இத்தினம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இறைவன் புவியையும், இயற்கையையும் மனிதனுக்கு அருட்கொடையாக வழங்கியிருந்தாலும் அவனது பேராசையின் காரணமாக புவியை தனக்காக்கிக் கொண்டான்; கட்டுப்படுத்த தொடங்கினான்.
மனிதனின் ஆசைகளோ எல்லை கடந்தவை. ஆனால் இயற்கை வளங்களோ அதற்கு ஈடானவை அல்ல. காடுகளை அழித்தான், உயர்ந்த கட்டடங்களை வானை விஞ்சும் அளவுக்கு கட்டினான், தொழிற்சாலைகளை அமைத்தான், விலங்குகளின் வாழிடத்தை அழித்தான். விளைவாக வளி மாசடைந்தது, புவி வெப்பம் அதிகரித்தது, மனித-யானை மோதல் ஆரம்பித்தது.
ஆனால் இயற்கையே அவன் மீது கண்ணுக்கு தெரியாத விஷக்கிரிமையைக் கொண்டு சோதிக்க தொடங்கிவிட்டான். இதனால் மனிதனைத்தவிர எல்லாமே வெளியிம் சுதந்திரமாக நடமாட அவன் மட்டும் வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ளான். புவியின் சீற்றத்தின் விளைவே கொரோனா தாக்குதல்.
ஆக இன்றைய நிலையில் மொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் பாரில் சுத்தமான வளி சுகந்தம் வீசுகிறது. காடழிப்பு இன்மையால் விலங்குகளுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது.
இன்றைய புவி தினமானது மனித இனத்தை தவிர்ந்த மற்றைய எல்லா இனங்களாலும் கொண்டாடப்பட்டு எமக்கு ஒரு படிப்பினையை கற்றுத்தந்துள்ளது. என்னவென்றால் இனி மேலும் தூரநோக்குடன் சுற்றாடலை நேசித்து நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிய பாடமாகும்.
சுற்றாடலை நேசிப்போம், நலமாக வாழுவோம்.
விடியும் பொழுது யாவருக்கும் வளமானதாக அமையட்டும்.
இன்று சர்வதேச புவி தினம்
Reviewed by Editor
on
April 22, 2020
Rating:
Reviewed by Editor
on
April 22, 2020
Rating:
