(எம்.என்.எம்.அப்ராஸ்)
நாடுபூராகவும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட "சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் " வேலைத்திட்டம் -2020 கீழ் கல்முனை பகுதியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விதை பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் இன்று புதன்(22) இடம்பெற்றது.
இதன் போது வீட்டுத் தோட்டம்,மற்றும் நெல் வயல் நிலங்களில் உள்ள வரம்புகளில் பயிர் செய்கைக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் கல்முனை விவசாய விரிவாக்கல் பிரிவில் உள்ள வீட்டுத் தோட்டம் செய்கையாளர்கள் 200 பேர் மற்றும் நெல் வயலில் ஈடுபடும் விவசாயிகளுக்கான வரம்பு பயிர் செய்கையாளர்கள் 250 பேர் இதன் மூலம்நன்மையடையவுள்ளனர் .
கல்முனை விவசாய விரிவாக்கல் நிலைய தலைமை விவசாய போதனாசிரியர் திருமதி எஸ்.கிருத்திகா, அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான பயிர் பாட விதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார், விவசாய போதனாசிரியர் என்.யோகலக்ஷ்மி,
தொழில்நுட்ப உதவியலாளார் குகழேந்தினி ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான பயிர் விதைகள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தனர்.
"சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்" விதை பொதிகள் வழங்கி வைப்பு.
Reviewed by Editor
on
April 22, 2020
Rating:
