(அரசாங்க தகவல் திணைக்களம்)
பேருவளையில் உள்ள பன்னில மற்றும் சீனன்கோட்டை பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புக் கருதி இப்பகுதிகள் மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பன்னில பகுதி ஏற்கனவே முற்று முழுதாக மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் சஞ்சரிக்கும் சீனன்கோட்டை பகுதியும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முடக்கப்பட்டிருந்த பண்டாரகம அத்துளுகம கிராமம் தற்போத மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரசின் காரணமாக இந்த கிராமம் முடக்கப்பட்டிருந்ததாக இராணுவத்தளபதி குறிப்பிட்டார்.
பேருவளையில் இரண்டு கிராமங்கள் முடக்கம்
Reviewed by Editor
on
April 14, 2020
Rating:
