இளம் கண்டுபிடிப்பாளரை வாழ்த்தினார் ஏ.எல்.எம்.சலீம்


சூரிய சக்தியின் உதவியுடனும் காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை உருவாக்கி இன்று (10) வெளியிட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளரும்,மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்.சௌபாத் அவர்களை அவரது இல்லத்திற்கு சென்று, சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளரும், நாடாளுமன்ற வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார் என்று அவருடைய ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்கள்.

கல்முனை ஸாஹிறா கல்லூரி பழைய மாணவருமான இவர் முதலாவது கண்டுபிடிப்பாக மின் மோட்டார் மூலமாக மாவு அரிக்கும் இயந்திரத்தையும், இரண்டாவது கண்டுபிடிப்பாக சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தையும் ஏற்கனவே கண்டுபிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளம் கண்டுபிடிப்பாளரை வாழ்த்தினார் ஏ.எல்.எம்.சலீம் இளம் கண்டுபிடிப்பாளரை வாழ்த்தினார் ஏ.எல்.எம்.சலீம் Reviewed by Editor on April 10, 2020 Rating: 5