(றிஸ்வான் சாலிஹூ)
கொரோனா அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள ஆண் துணையின்றி வாழ்ந்துவரும் சுமார் 200 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (30) வியாழக்கிழமை மாலை இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் தலைவர் அஷ்ஷேக் எம்.ஐ.அன்சார் (தப்லீகி) தலைமையில் அக்கரைப்பற்று அம்மார் இப்னு யாசீர் அரபுக் கலாசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
அக்கரைப்பற்று இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஆதரவில், ஒரு சில நலன் விரும்பிகளின் பூரண பங்களிப்புடன் இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரபுக் கலாசாலையின் அதிபர் அஷ்ஷேக் அப்துல் அஸீஸ் (ஸஹ்வி), இப்பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் அம்மார் இப்னு யாசீர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
COVID-19 உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது
Reviewed by Editor
on
April 30, 2020
Rating:
Reviewed by Editor
on
April 30, 2020
Rating:







