அக்கரைப்பற்று மாநகர சபை NFGG உறுப்பினர்களின் ஒரு மாதக் கொடுப்பனவு, கொரோனா நிவாரணப் பணிக்கு கையளிப்பு


அக்கரைப்பற்று மாநகர சபையில் அங்கம் வகிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) உறுப்பினர்கள் மூவரும் தங்களது ஒரு மாத கொடுப்பனவைக் கொரோனா நிவாரணப் பணிக்குப் பயன்படுத்துவதற்காக அக்கரைப்பற்றில் அமைந்துள்ள "கொவிட்
நிவாரணப் பணியிடம் ஒப்படைத்தார்கள்.


இன்று (01) புதன்கிழமை நண்பகல்
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த வேளையில், அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாயலில் அமைக்கப்பட்டுள்ள 'Covid 19 அவசர நிவாரணப் பணிக்கான அலுவலகத்தில்' இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஓய்வு பெற்ற அதிபரும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளருமான ஜனாப். எம்.பீ. அப்துல் ஹமீட் (மஹ்றூப்), நிவாரணக் குழு சார்பாக இதனைப் பெற்றுக் கொண்டு நன்றியறிதலைத் தெரிவித்ததோடு, மேலும் இது போன்ற நற்பணிகளை முன்னெடுக்குமாறும் வேண்டிக் கொண்டார்.

அக்கரைப்பற்று மாநகர சபை ந.தே.மு (NFGG) உறுப்பினர்களான எம்.எம்.தையார், ஐ.எல்.ஷரிப்டீன், எம்.ஐ. றிஸ்றீனா ஆகியோரே இக் கொடுப்பனவை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) சார்பாக அதன் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர், தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மத், 'Covid 19 நிவாரணப் பணிக் குழு' சார்பாக Iconic Youths இளைஞர் கழகத் தலைவர் யூ.எம்.தில்சான் மற்றும் ஏ.எம்.எம்.மபாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று மாநகர சபை NFGG உறுப்பினர்களின் ஒரு மாதக் கொடுப்பனவு, கொரோனா நிவாரணப் பணிக்கு கையளிப்பு அக்கரைப்பற்று மாநகர சபை NFGG  உறுப்பினர்களின் ஒரு மாதக் கொடுப்பனவு, கொரோனா நிவாரணப் பணிக்கு கையளிப்பு Reviewed by Editor on April 01, 2020 Rating: 5