(றிஸ்வான் சாலிஹூ)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 35இலட்சத்து 34ஆயிரத்து 306யை கடந்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்ற போதும், இந்த வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதை ஜீரணிக்க முடியாமல் உள்ளது.
இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் தொகை 2 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 35லட்சத்து 34 ஆயிரத்து 306பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இவர்களில் 24லட்சத்து 69 ஆயிரத்து 950பேர் உயிரிழந்ததோடு, 11இலட்சத்து 45ஆயிரத்து 31பேர் உலகளாவிய ரீதியில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்கள் 35இலட்சத்தையும் தாண்டியுள்ளது
Reviewed by Editor
on
May 03, 2020
Rating:
