ஊடரங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் மட்டுமே NIC இறுதி இலக்க நடைமுறை


நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள்  தேவையற்ற முறையில் ஒன்று கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அடையாள அட்டை  இலக்க நடைமுறை ஊரடங்கு உத்தரவு உள்ள  பகுதிகளுக்கு மட்டுமே அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் போது வீடுகளை விட்டு வெளியேறும் பொதுமக்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஒரு குறிப்பிட்ட ஊர் அல்லது பிரதேசம் கொரோனா ஆபத்து பிரதேசமாக அடையாளப் படுத்தப்பட்டு இருந்தால் அப்பிரதேசத்தில் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடரங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் மட்டுமே NIC இறுதி இலக்க நடைமுறை ஊடரங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் மட்டுமே NIC இறுதி இலக்க நடைமுறை Reviewed by Editor on May 03, 2020 Rating: 5