நாவலப்பிட்டிய நகரசபைத் தலைவர் உட்பட 7 பேர் நேற்றுமுன்தினம் (30) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ், ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், வட்டவளை மற்றும் கினிகத்தேனைபொலிஸார் இணைந்து குறித்த சுற்றுலா விடுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
பொலிஸாரின் முற்றுகையையடுத்து அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளனர். அவர்களை கைதுசெய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்கின்றது.
சூதாட்டத்துக்காக பயன்படுத்தப்பட்டிருந்த 60 ஆயிரம் ரூபா பணம், மதுபான போத்தல்கள், நகரசபை தலைவரின் சொகுசு வாகனம் மற்றும் அவரின் சகாக்கள் பயணித்த வாகனம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நாவலப்பிட்டி நகரசபைத் தலைவர் உட்பட 7 பேர் கைது
Reviewed by Editor
on
May 02, 2020
Rating:
