குவைத் நாட்டின் கடற்கரை உள்ள சில பகுதிகளில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் தற்போது இடம்பெற்று வருகின்றது.
குவைத் சுற்று சூழல் பாதுகாப்பு துறை அமைச்சு இது குறித்த ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது என்று அதன் தலைமை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
குவைத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இது போல் கடல் தண்ணீரில் வெப்பத்தின் அளவு அதிகரித்து ஒட்சிசன் அளவு குறைந்த நிலையில் இது போன்று மீன்கள் இறந்து கரை ஒதுங்கி காணப்பட்டுள்ளது.
குவைத்தின் Shuwaikh, Sulaibikhat மற்றும் Doha பகுதிகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கியுள்ளது
Reviewed by Editor
on
May 01, 2020
Rating:
