வங்காள விரிகுடாவில் உருவான மீயுயர் நிலையிலான சூறாவளியின் விளைவுகளால், நாட்டின் எட்டு மாவட்டங்களில் இரண்டாயிரத்து 487 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பதாயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்காப்பு முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த மத்திய நிலையம் நேற்று மாலை ஆறு மணிக்கு விடுத்த அறிக்கையின் பிரகாரம்,இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிப்புக்கள் அதிகமாகும். இங்கு வெள்ளம் மண்சரிவு முதலான இயற்கை அனர்த்தங்களால் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஏழாயிரத்து 984 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கடந்த சில நாட்களாக பெய்த அடைமழையைத் தொடர்ந்து பல பிரதான நதிகளில் நீர்மட்டம் அதிகரித்திருந்தது. இந்த நீர்மட்டங்கள் வழமைக்குத் திரும்பியிருப்பதாக இடர்காப்பு மத்திய நிலையம் இன்று அதிகாலை மூன்று மணிக்கு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
களுகங்கையின் கரையிலுள்ள மில்லகந்த, ஜின் கங்கையின் கரையிலுள்ள தவலம, நில்வளா கங்கையின் கரையிலுள்ள பாணடுகம ஆகிய இடங்களில் மாத்திரம் ஓரளவு வெள்ளநிலைமை நீடிக்கிறது .
(News.lk)
சீரற்ற காலநிலையால் உயர்ந்த நதிகளில் நீர்மட்டம் வழமை நிலைக்கு
Reviewed by Editor
on
May 20, 2020
Rating:
