(றிசாத் ஏ காதர்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்தவண்ணமுள்ளது. கட்டுப்படுத்தும் அதிகாரிகள் போதை வியாபாரிகளின் தோழர்களாக மாறிப்போன சூழலில் இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது கேள்விக்குறியான சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமைப்பட்ட இந்த போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள கழகங்கள், இளைஞர் அமைப்புகள் மற்றும பொது நிறுவனங்களை ஒன்றிணைத்து பணியாற்ற வேண்டிய தேவை மிக அவசியமானது.
இந்த விடயத்தில் அரசியல், நிறுவனங்களின் அதிகாரம் மற்றும் அதிகார வரக்கங்களின் தலையீடு என அனைத்தையும் தகர்த்தெறிந்து பணியாற்றும் திராணியுள்ளவர்கள் மிக மிக அவசியம்.
சாதாரணமான போதைப்பொருளில் அகப்படும் ஒருவர் பின்னர் பாரிய விற்பனையாளராக மாறுவதற்கு ஏதுவான காரணிகள் அடையாளம் காணப்படுதல் அவசியம். குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது இதனை நமது அலட்சியங்கள் ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றோம்.
எனவே முறைப்படுத்தப்பட்ட ஒரு செயற்றிட்டத்தின் ஊடாக இதனை கையாள்வதற்கு ஏதுவான பொறிமுறைகளை வகுத்து செயற்பட முன்வாருங்கள்.
போதையிலிருந்து மீட்போம் நமது இளைஞர்களை....
Reviewed by Editor
on
May 29, 2020
Rating:
