ஊடகவியலாளர் மிதுன்சங்கர் உயிரிழப்பு


மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் இன்று (13) புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் திருகோணமலையை சேர்ந்த ஊடகவியலாளர் மிதுன்சங்கர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ஊடகவியலாளர் மிதுன்சங்கர் செலுத்திய மோட்டர் சைக்கிள்களை வீதி ஓரத்தில் நிறுத்திய போது பின்னால் வந்த உழவு இயந்திரம் மோட்டர் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருகோணமலையை சேர்ந்த  ஊடகவியலாளர் மிதுன்சங்கர் (28வயது) மூன்று நண்பர்களுடன் இரண்டு மோட்டார் சைக்கிளில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இருந்து கல்முனையிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு,
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடகவியலாளர் மிதுன்சங்கர் உயிரிழப்பு ஊடகவியலாளர் மிதுன்சங்கர் உயிரிழப்பு Reviewed by Editor on May 13, 2020 Rating: 5