(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கான தனியார் பஸ் சேவை இன்று (25) செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண நிலையை அடுத்து, சுமார் இரண்டு மாத காலங்கள் தடைப்பட்டிருந்த அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கான தனியார் பஸ் சேவைகளில் ஒன்று, தனது
பஸ் பயணத்தை மீண்டும் இன்று ஆரம்பித்துள்ளது.
இந்த பஸ் சேவை ஆரம்பிப்பதற்கு முன்னர் பஸ் சேவை ஆரம்பிக்கும் இடத்தில் அக்கரைப்பற்று சுகாதாரப் பரிசோதகர்கள், போக்குவரத்து பொலிஸார் இணைந்து, பஸ்ஸில் பயணிப்பவர்கள் சரியான முறையில் சமூக இடைவெளி பேணல் , முகக்கவசம், பயணிகளின் நிலை என்பன உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கான பஸ் சேவை இன்று ஆரம்பம்
Reviewed by Editor
on
May 25, 2020
Rating:
