கட்டார் நாட்டில் இருந்து இன்று (25) இலங்கைக்கு வருகை தரவிருந்த சிறப்பு விமானம் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அசாதாரண நிலையால் வெளிநாடுகளில் சிக்கி தாயகம் செல்ல முடியாமல் இருந்த இலங்கையர்களை விசேட விமானம் மூலம் தாயகத்திற்கு அழைத்து வர இலங்கை அரசு தீர்மானித்தமையின் அடிப்படையில் அண்மையில் உலகின் பல நாடுகளிலிருந்து இலங்கையர்கள் கட்டம் கட்டமாக அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கத்தாரிலுள்ள இலங்கையர்களில் ஒரு தொகையினர் இன்று (25) தாயகம் அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டிருந்தனர்.
அண்மையில் குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களிலிருந்து நேற்று (24) வரை அதிகளவிலான கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், கத்தாரிலிருந்து இலங்கைக்கு இன்று பயணிக்க ஏற்பாடு செய்யபட்டிருந்த விமானம் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு வரவிருந்த விமானம் இரத்து!
Reviewed by Editor
on
May 25, 2020
Rating:
