மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை (26) செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர, ஏனைய மாவட்டங்களில் இந்த சேவைகள் இடம்பெறும் என்று இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பஸ் போக்குவரத்து சேவைகள் காலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 6.00 மணியுடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும்,
கொழும்பு கண்டி வீதியில் இடம்பெறும் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் நிட்டம்புவ வரையிலும்,
காலி வீதி ஊடாக செல்லும் பஸ்கள் பாணந்துறை வரையிலும், ஹைலெவல் மற்றும் லோலெவல் வீதிகள் ஊடாக செல்லும் பஸ்கள் அவிசாவளை வரை பயணிக்கும்.
அனுராதபுரம், புத்தளம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய இடங்களில் இருந்து நீர்கொழும்பு வீதியில் கொழும்பு செல்லும் பஸ்கள் நீர்கொழும்பு வரையிலும், அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் பஸ்கள் கொட்டாவ வரையில் மாத்திரமே பயணிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும் தனியார் பஸ்களுக்கும் தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதோடு,
சுகாதார பிரிவினரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய பஸ் சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பஸ்களில் ஆசனத்தில் அமர்ந்து செல்வதற்கு அனைத்துப் பயணிகளுக்கும் உரிமை உள்ளதோடு, பஸ் கட்டணத்தை அதிகரிக்க நாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த பஸ் சேவைகள் நிறுத்தப்படும் இடம் வரையிலான பஸ் கட்டணத்தை மாத்திரமே அறவிட வேண்டும் என்பதோடு, பஸ்கள் தமது முடிவிடத்தை பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பயணியும் கட்டாயம் முககவசத்தை அணிந்திருத்தல் அத்தியாவசியமானதாகும். பஸ்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தின் கால எல்லையை ஜூலை மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வழமைக்கு திரும்பும் பஸ் சேவையின் விதிமுறைகள்
Reviewed by Editor
on
May 25, 2020
Rating:
Reviewed by Editor
on
May 25, 2020
Rating:
