திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் பெண் உயிரிழப்பு


குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கிபிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பயாகலையை சேர்ந்த 52வயதுடைய பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை திடீரென சுகயீனமுற்ற இவரை இராணுவம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது இந்த உயிரிழப்பு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் சடலம் பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதுடன், இவர் கொரோனா நோய்க்கு தொற்றுக்குள்ளானாரா என்பது பற்றி பரிசோதிப்பதற்கான மாதிரிகள் மட்டக்களப்பு வைத்தியசாலை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவருடன் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று (24) காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் பெண் உயிரிழப்பு திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் பெண் உயிரிழப்பு Reviewed by Editor on May 25, 2020 Rating: 5