(எம்.கிருஸ்ணா)
பின்னவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாரத்தென்ன பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நபர் ஒருவர் பலியானதுடன், இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரையும் கைது செய்துள்ளதாக பின்னவல பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பம்புகொலை கீழ்பிரிவு தோட்டத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியே இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மோதலில் ஈடுபட்ட இருவரும் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் கசிப்பு அருந்தியிருந்ததாகவும் பின்னவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னவலை பம்புகொலை கீழ்ப்பிரிவை சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலுகுமார் ராஜ் என்பவரே இச்சம்பவத்தில் பலியானவராவார்.
உயிரிழந்தவரின் சடலத்தை பலாங்கொடை நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் டி.எம்.சந்திரசேகர பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மாரத்தென்ன வைத்தியசாலையில் இருந்து பலாங்கொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை,கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பின்னவல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கசிப்பினால் உயிர் போனது!!!!
Reviewed by Editor
on
May 07, 2020
Rating:
