இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தால் பெளத்த மத குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது


(றிஸ்வான் சாலிஹூ)

கொரோனா அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இன நல்லிணக்கத்தின் அடிப்படையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள பெளத்த மதத்தை சேர்ந்த சுமார் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (13) புதன்கிழமை காலை இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் தலைவர் அஷ்ஷேக் எம்.ஐ.அன்சார் (தப்லீகி) தலைமையில் "அக்கரைப்பற்று சிறி விஜயராம மகா விகாரையில் நடைபெற்றது. 

அக்கரைப்பற்று இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஆதரவில் மதங்களுக்கு அப்பால் மனித குலத்திற்கு என்று செய்யப்படுகின்ற நல்ல விடயங்களில் ஒன்றாகவே இதனை கருதக்கூடியதாக இருக்கிறது.

இந்த வழிகாட்டல் மையம் பல வருடங்களாக சமூக சேவை ரீதியாக இன மத பேதங்களை மறந்து, அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஸ்டப்படுகின்ற அனைத்து மக்களுக்கும் உதவி செய்து வருவதோடு, ஒவ்வொரு வருடமும் பாரிய அளவில் இரத்ததான முகாமையும் செய்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று சிறி விஜயராம மகா விகாராதிபதி சங்கைக்குரிய பூஜிய தேவஹொட சோரதே சுவாமின் வஹான்ஸ அவர்களும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், மற்றும் வழிகாட்டல் மையம் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தால் பெளத்த மத குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தால் பெளத்த மத குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது Reviewed by Editor on May 13, 2020 Rating: 5