அக்கரைப்பற்று 40 ஆம் கட்டையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த இளம் தம்பதியினரையும் சாரதியையும் அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று (12) மாலை கைது செய்ததாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.பி.விஜயதுங்க தெரிவித்தார்.
இவர்களிடமிருந்து 21 இலட்சம் ரூபா மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாகவும் அத்துடன் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியதுடன் அதன் சாரதியையும் கைது செய்ததாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து திருக்கோவில் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த முச்சக்கரவண்டியை அக்கரைப்பற்று 40 ஆம் கட்டையில் பொலிஸார் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போதே ஹெரோயின் கைப்பற்றபபட்டதாகவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் விசாரணையின் பின் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
(MN)
ஹெரோயினுடன் தம்பதியும் சாரதியும் கைது
Reviewed by Editor
on
May 13, 2020
Rating:
