தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை


இலங்கையில் புனித ஷவ்வால் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை (23) சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம்  சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டில் எப்பாகத்திலாவது தலைப்பிறை தென்பட்டால் தகுந்த  ஆதாரங்களுடன் 0112 432110, 0112451245, பெக்ஸ் 0112 390783 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கின்றது.
தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை Reviewed by Editor on May 22, 2020 Rating: 5