அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியின் கண்டிப்பான உத்தரவு


முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ரமழான் பெருநாள் உற்சவ காலங்களில்  மிகவும் அவதானமாகவும் விழிப்பாகவும் செயல்படவேண்டும். அவசியம் ஏற்படுமிடத்து மாத்திரம் ஜவுளிக்கடைகளில் கொள்வனவுக்காகச் செல்ல வேண்டுமென அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பாரூசா  நக்பார் மிகவும் கண்டிப்பான கட்டளை  பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக ஜவுளிக்கடை உரிமையளர்களுக்கும் , சிகை அலங்கார உரிமையாளரகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம்  தொடர்பாக  அவர்கள் எவ்வாறு தமது தொழில்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஏலவே  விளக்கி இருந்த டாக்டர் பரூசா  நக்பார்  எழுதுமூலமான அறிவுரைகளையும்  வழங்கியிருந்தார். 

இந்த ஒழுங்கு முறைகளைப் கடைபிடிப்பவர்களுக்கு மாத்திரமே  தமது நிலையங்களை  திறக்க அனுமதி வழங்கவுள்ளதகவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடிந்து விட்டதாக மக்கள் கருத வேண்டாம்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொறோன வைரஸ் தாக்கத்திலிருந்தும், அதன் அபாயத்திலிருந்தும் நாம் இன்னும் விடுபடவில்லை என்பதனை மறந்துவிடலாகாது.  நாளாந்தம் இதன் தாக்கத்திற்குட்பட்ட பலர் இனங்காணப்பட்டு வருகின்றதனை நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தும் அதன் ஆபத்தை இன்னும் பலர் அறிந்துகொள்ளாமல் செயற்பட்டுவருவது கவலைக்குரிய விடயமாகவுள்ளது.  

(தினகரன்)

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியின் கண்டிப்பான உத்தரவு அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியின் கண்டிப்பான உத்தரவு Reviewed by Editor on May 20, 2020 Rating: 5