துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்


மாளிகாவத்தை, வீட்டுத் திட்ட பகுதியில் இன்று (30) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமொன்றில் ரஊப் எனும் நபர் படுகாயமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு பாதாள உலக கோஷ்டியினரிடையே ஏற்பட்டுள்ள முறுகல் காரணமாகவே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம் Reviewed by Editor on May 30, 2020 Rating: 5