மீன் விற்பனை நிலையத்தில் சுகாதார சீர்கெடு


(றிஸ்வான் சாலிஹூ)

அக்கரைப்பற்று பொது மீன் விற்பனை நிலையத்தில் சுகாதார சீர்கெடு காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அக்கரைப்பற்று மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட, பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பொது மீன் விற்பனை நிலையத்தில், மீன் விற்பனையாளர்கள் தங்களது தொழிலை மீன் பொது விற்பனை கட்டிட தொகுதிக்குள்ளயே பல காலங்களாக விற்பனை செய்து வந்துள்ளார்கள்.

எனினும் சில காலங்களாக சில மீன் வியாபாரிகள் மீன்களை கட்டிடத் தொகுதிக்கு வெளிப்புறத்தில் வீதியோரமாக விற்பனை செய்து வருவதை அவதானிக்க முடிகிறது.

மீன் விற்பனை முடிந்த பிறகு மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் மீன் விற்பனை செய்யும் இடத்திலும், மீனை காட்சிப்படுத்தும் உபகரணத்திலும் நாய், பூனை மற்றும் மாடு போன்றவைகள் அவைகளின் சிறுநீர் மற்றும் மலங்களை கழித்து செல்வதனால், நுகர்வோர் பல சுகாதார பிரச்சினைகளை எதிர் நோக்குவதை காணக்கூடியதாக உள்ளது.

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டு, இவ்வாறான சுகாதார சீர்கெடு நடை பெறுவதை தடுத்தும், இது தொடர்பில் அந்த மீன் வியாபாரிகளுக்கு சுத்தம் சுகாதாரமாக மீன் விற்பனை செய்வதற்கு  விழிப்புணர்வை வழங்கி, இனி வரும் காலங்களில் சுகாதாரமான முறையில் மீன் விற்பனை நடைபெறுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் நுகர்வோர் கேட்டுக் கொள்கின்றார்கள்.
மீன் விற்பனை நிலையத்தில் சுகாதார சீர்கெடு மீன் விற்பனை நிலையத்தில் சுகாதார சீர்கெடு Reviewed by Editor on May 30, 2020 Rating: 5