பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை இன்று (26) உயர்நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான ஆறாவது நாள் விசாரணையே ஆரம்பமாகியுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆரம்பமாகிறது
Reviewed by Editor
on
May 26, 2020
Rating:
