இன்று (26) அதிகாலை அம்பலாங்கொடை நகரில் வர்த்தக நிலையங்களில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 4 வர்த்தக நிலையங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். அம்பலாங்கொடை பிரதான வீதியில் உள்ள உணவகம், இலத்திரினியல் உபகரண விற்பனை நிலையம், ஆடை விற்பனை நிலையம் மற்றும் பல்பொருள் அங்காடி கடைகள் என்பன தீயினால் அழிவடைந்துள்ளன.
தெற்கு கடற்படைத் தள தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்பலாங்கொடை நகர சபை கொள்கலன் பார ஊர்திகளை பயன்படுத்தி அம்பலாங்கொடை பொலிசார் மற்றும் காலி, தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்னனர்.
(ITN)
அம்பலாங்கொடை நகரில் வர்த்தக நிலையங்களில் தீ பரவல்
Reviewed by Editor
on
May 26, 2020
Rating:
