ஊடரங்கு பற்றிய அறிவித்தல்


செவ்வாய் (26) முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மே 26ஆம் திகதி (செவ்வாய்) முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை - நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்.

மே 26ஆம் திகதி, செவ்வாய், முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியும் அளிக்கப்படும்.

நாளை, 24ஆம் திகதி, ஞாயிறு மற்றும் 25ஆம் திகதி, திங்கள், ஆகிய இரு நாட்களும் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


ஊடரங்கு பற்றிய அறிவித்தல் ஊடரங்கு பற்றிய அறிவித்தல் Reviewed by Editor on May 23, 2020 Rating: 5