(றிஸ்வான் சாலிஹூ)
நாட்டில் ஏற்பட்டுள்ள COVID-19 தொற்று காரணமாக மருத்துவக் கிளினிக் நோயாளிகளுக்கான மருந்துகள் இதுவரை தபால் சேவை ஊடாக மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றது. நாடு தற்போது சாதாரண நிலைக்கு திரும்புதல் தொடர்பான சுற்றுநிருபத்திற்கு அமைவாக தபால் மூலமான மருந்து சேவையினை குறைத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் நோயாளியை நேரடியாக பார்வையிட்டு மருந்து வழங்கும் நடவடிக்கையினை படிப்படியாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த திட்டமிடடுக்கமைவாக, எதிர்வரும் 26.05.2020 முதல் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் தினமும் 100 வகையான நோயாளிகள் வைத்தியர்களால் பார்வையிடப்படுவார்கள்.
கிளினிக் வருபவர்கள் 0761703623, 0672052068 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் காலை 8.00மணி முதல் மாலை 4.00மணி வரை தங்களுக்குரிய நியமன திகதி மற்றும் நேரங்களை உறுதிப் படுத்திக் கொள்வதுடன், தங்களுக்கு வழங்கப்பட்ட திகதி மற்றும் நேரத்திற்கு சமூகமளிக்காவிட்டால், அந்த நியமனம் நிராகரிக்கப்படும் என்று வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மருத்துவ கிளினிக் தொடர்பான விசேட அறிவித்தல்
Reviewed by Editor
on
May 21, 2020
Rating:
