பார்மஸிகளில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து கொள்ளுங்கள், பிராந்திய சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு
(றிஸ்வான் சாலிஹூ)
இன்னும் இரு வாரங்களுக்குள் எமது பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பார்மசிகளில் காணப்படும் பாரிய குறைபாடுகளை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது நாங்கள் விரைவில் அங்கு வந்து சோதனை இட்டு, அதில் குறைபாடுகள் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பீ.சுகுணன் அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளார்.
மேலும் அவர் அறிவித்துள்ள அறிக்கையில்,
பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான எமது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் வருகின்ற 64 பார்மசிகளையும் அதிரடியாக சோதனையிட இருக்கின்றோம். அந்த சோதனையின் போது பாரிய குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக சட்ட நடவடிக்கை மூலமாக அந்த மருந்தகங்கள் சீல் வைத்து மூடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு விசேடமாக நோயாளிகளுக்கு பாதுகாப்பான மருந்து மாத்திரைகளை கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டியது எமது பாரிய பொறுப்புகளில் ஒன்றாக காணப்படுகிறது.
எனவே இந்த விடயத்தில் எவர் தலையிட்டாலும் இரும்புக்கரம் கொண்டு ஒழுங்குபடுத்துகின்ற எமது நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பீ.சுகுணன் மேலும் தெரிவித்துள்ளார்.
பார்மஸிகளில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து கொள்ளுங்கள், பிராந்திய சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு
Reviewed by Editor
on
May 16, 2020
Rating:
Reviewed by Editor
on
May 16, 2020
Rating:
