மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இறம்பொடை, வேவண்டன் இல்லத்தில் இன்று (29) வெள்ளிக்கிழமை வைக்கப்படவுள்ளது என அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்னாரின் பூதவுடல் இன்று காலை ஹெலிகொப்படர் மூலம் கம்பளைக்கு எடுத்து வரப்பட்டு கம்பளையில் மக்கள் அஞ்சலி நிகழ்வு முடிவடைந்த பின்னர், மீண்டும் புஸல்லாவை வழியாக பூதவுடல் தாங்கி பேழை றம்பொடை வேவண்டன் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.
தொண்டமானின் பூதவுடல் வேவண்டன் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக...
Reviewed by Editor
on
May 29, 2020
Rating:
