கொரோனா தொற்றுக்கு பலியான முதல் வைத்தியர்


குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி முதலாவது மருத்துவர் மரணமான சம்பவம் அங்கு இடம்பெற்றுள்ளது.

குவைத்தின் சைன் மருத்துவமனையில் E.N.T பிரிவில் சேவையாற்றி வந்த எகிப்திய மருத்துவர் தாரிக் முகைமர் என்பவரே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

இவர் பல ஆண்டுகளாக இந்த வைத்தியசாலையில் சேவையாற்றி வந்ததோடு, இவரின் மறைவுக்கு அவருடன் பணியாற்றிய பணியாளர்கள் மற்றும் குவைத் சுகாதாரத்துறை அமைச்சு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு பலியான முதல் வைத்தியர் கொரோனா தொற்றுக்கு பலியான முதல் வைத்தியர் Reviewed by Editor on May 09, 2020 Rating: 5