கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் கொடைத் தொகை 100 கோடி ரூபாய்களை இன்று (15) கடந்துள்ளது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியத்திற்கு உதவி வழங்கிய நிறுவனங்கள் பின்வருமாறு,
1.ஸ்ரீ லங்கா டெலிகொம் பீஎல்சி மற்றும் மொபிடெல் நிறுவனம் என்பன 5 கோடி ரூபாய்களை அன்பளிப்பு செய்துள்ளன.
2.தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை 5 கோடி ரூபாய்களை அன்பளிப்பு செய்துள்ளது.
3.Naturub Industries தனியார் நிறுவனம் ஒரு கோடி ரூபாய்.
4.உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சங்கம் 03 லட்சம் ரூபாய்.
5.திரு. டிசில் குரே ஒரு லட்சம் ரூபாய்க
6.முன்னாள் அமைச்சரவை அமைச்சு செயலாளர்களின் சங்கம் பத்து இலட்சம் ரூபாய்.
7.ஸ்ரீலங்கா பொதுஜன பொறியியலாளர்கள் முன்னணி பத்து இலட்சம் ரூபாய்.
8.இலங்கை கால்பந்து சம்மேளனம் 20 இலட்சம் ரூபாய்.
9.Bharti Airtel Lanka தனியார் நிறுவனம் 12 இலட்சம் ரூபாய்.
10.Certis Lanka Security Solution தனியார் நிறுவனம் பத்து இலட்சம் ரூபாய்.
11.திரு. ரிச்சட் பெர்னாண்டோ பத்து இலட்சம் ரூபாய்.
12.திரு. எஸ். ஏ. சமரதுங்க ஐம்பதாயிரம் ரூபாய்களையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்ததுடன் மொத்த அன்பளிப்புத் தொகை 100 கோடி ரூபாய்களைக் கடந்துள்ளது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
COVID-19 பாதுகாப்பு நிதிக்காக 100 கோடியை தாண்டியுள்ளது
Reviewed by Editor
on
May 15, 2020
Rating:
