கல்முனையில் தீ விபத்து, எரிந்து சாம்பலாகிய வர்த்தக நிலையம்


கல்முனை கோயில் வீதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை எரிந்து சாம்பலாகியுள்ளது.

கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கல்முனை பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவாமல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனையில் தீ விபத்து, எரிந்து சாம்பலாகிய வர்த்தக நிலையம் கல்முனையில் தீ விபத்து, எரிந்து சாம்பலாகிய வர்த்தக நிலையம் Reviewed by Editor on June 07, 2020 Rating: 5