தேர்தலில் போட்டியிடாமல் விலகினார் மங்கள


ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்டத்தின் சார்ப்பில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என இன்று (09) மாத்தறையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக விருப்பு இலக்கம் 8 வழங்கப்பட்டுள்ள இந்நிலையில் இவ்வாறான முடிவை எடுத்துள்ளார்.

அவர் இன்று முதல் பாராளுமன்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க  தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

தேர்தலில் போட்டியிடாமல் விலகினார் மங்கள தேர்தலில் போட்டியிடாமல் விலகினார் மங்கள Reviewed by Editor on June 09, 2020 Rating: 5