தேசிய காங்கிரஸ் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழா!!!


(றிஸ்வான் சாலிஹூ)

தேசிய காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்,சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்புவிழா இன்று (28) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதில் நடைபெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் அழைப்பை ஏற்று முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் சார்பாக இம்முறை திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ்.வை.எம்.ஹனீபா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், புத்திஜீவிகள், கல்விமான்கள், மீனவ மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள், அத்தோடுபெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






தேசிய காங்கிரஸ் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழா!!! தேசிய காங்கிரஸ் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழா!!! Reviewed by Editor on June 29, 2020 Rating: 5