இலங்கையில் அமுலில் இருந்த ஊரடங்கு முற்றாக நீக்கம்


இன்று (28) ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில் இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நாட்டில் ஊரடங்குச் சட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரம்பத்தில் முழு நாளும், அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு  அமுல்படுத்தப்பட்டிருந்தது.

நாட்டில் இறுதியாக கடந்த ஜூன் 13ஆம் திகதி முதல் தினமும் நள்ளிரவு 12.00 மணி முதல் 4.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமுலில் இருந்த ஊரடங்கு முற்றாக நீக்கம் இலங்கையில் அமுலில் இருந்த ஊரடங்கு முற்றாக நீக்கம் Reviewed by Editor on June 28, 2020 Rating: 5