(றிஸ்வான் சாலிஹூ)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் - 19 அசாதாரண சூழ்நிலையை அடுத்து கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தது.
எனினும், தற்போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (29) திங்கட்கிழமை மீள திறக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், நாளை (29) திறக்கப்படவுள்ள அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலய வகுப்பறைகள் மற்றும் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்து சிரமதானம் செய்யும் நிகழ்வு இன்று (28) ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம் தலைமையில் நடைபெற்றது.
இந்த சிரமதான நிகழ்வில் பாடசாலையின் அதிபர், உதவி, பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வு
Reviewed by Editor
on
June 28, 2020
Rating:
Reviewed by Editor
on
June 28, 2020
Rating:




