கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு முகக்கசவம் அணியாத நபர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்-
கொரோனா வைரஸ் பரவல் நிலை முற்றாக அகலும் வரை, அதனை கட்டுப்படுத்தப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானதுடன், சுகாதாரப் பிரிவின் பரிந்துரைகளை ஏற்று நடக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக பேணப்பட்டு வந்த சுகாதார நடைமுறைகள், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, வழக்குத் தொடரப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிய மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!!!!
Reviewed by Editor
on
June 26, 2020
Rating:
Reviewed by Editor
on
June 26, 2020
Rating:
