(றிஸ்வான் சாலிஹூ)
வைத்தியர் எம்.எம்.நௌசாத்தின் "பூச்செண்டு போல ஒரு மனிதன்" நூல் வெளியீட்டு விழா நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை காலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் ஏற்பாட்டில் டாக்டர் நெளசாத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுகுணன் அவர்களும், விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.ஹனீபா அவர்களும், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம் ஹனீபா அவர்களும், தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார துறை பீடாதிபதி றமீஸ் அப்துல்லாஹ் மற்றும் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கலை கலாசார ஆய்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டாக்டர் நெளசாத்தின் நூல் வெளியிடப்பட்டது
Reviewed by Editor
on
June 29, 2020
Rating:
Reviewed by Editor
on
June 29, 2020
Rating:










