கொரோனா பாதிப்பு 1.3 கோடியை தாண்டியது, 5.71 இலட்சம் பேர் உயிரிழப்பு


உலகம் முழுவதும் கொரோனாவால் 13,034,955 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,581,525 பேர் குணமடைந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 58,928 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோடு, பல்வேறு நாடுகளை சேர்ந்த 571,518 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் 2 வது இடத்தில் உள்ள பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் 631 புதிய இறப்புகளைப் பதிவு செய்துள்ளது,  மொத்தம் 1,864,681 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அந்த பல்கலைக்கழக அறிக்கை தெரிவிக்கிறது.
கொரோனா பாதிப்பு 1.3 கோடியை தாண்டியது, 5.71 இலட்சம் பேர் உயிரிழப்பு கொரோனா பாதிப்பு 1.3 கோடியை தாண்டியது, 5.71 இலட்சம் பேர் உயிரிழப்பு Reviewed by Editor on July 13, 2020 Rating: 5