சிதைந்த காவியம்.....


(மிஸ்ரா ஜப்பார்)

தொடுக்காத பூச்சரமே.......
நித்திலம் துடிக்கும் உன் மோகனத்தை விஞ்சிய தாகத்தை
சிலந்தி வலையென பின்னிக் கொண்டிருக்கிறது
மலராத மொட்டுக்கள்.....

கருங்கல்லை அரித்திட முனையும் கறையானின்
இரகசிய தியானங்களை இசையென மீட்டிக் கொண்டிருக்கிறது இவள் தனிமை......

உடைந்து போன கண்ணாடிச் சிதறல்களை
நெருப்புத் தீண்டிய பஞ்சனையென
மெல்லக் கடக்கிறது
மீட்ட மறந்த வீணை.....

சிதையோடு கனவாகி சிதைந்து போகும் என் மாறா சரித்திரமாய் பெருகி வரும் கண்ணீரை இமை கொண்டு காத்து நிற்கிறேன்......

சிதைந்த காவியம்..... சிதைந்த காவியம்..... Reviewed by Editor on July 15, 2020 Rating: 5