மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் 2020 ஆண்டின் கால போகத்திற்கான அறுவடை விழா கிரான் கமநல சேவைகள் நிலையப் பிரிவிற்குட்பட்ட பூலாக்காட்டில் இடம்பெற்றது.
முள்ளிப்பொத்தானை, கறந்தவட்டவான் கமநல அமைப்புகளின் அனுசரணையுடன் உதவி ஆணையாளர் கி.ஜகன்னாத் அவர்களின் தலைமையில் நேற்று (30) செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம், விவசாய பணிப்பாளர், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் ஐந்து பிள்ளைகளுக்கு ரூபா 10,000 வீதம் புலமைப் பரிசு வழங்கப்பட்டதோடு, 2500 ரூபா வீதம் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வறிய 10 விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அறுவடை விழா - 2020
Reviewed by Editor
on
July 01, 2020
Rating:
Reviewed by Editor
on
July 01, 2020
Rating:



