(றிஸ்வான் சாலிஹூ)
தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான அட்டாளைச்சேனை காரியாலயம் நேற்று (04) சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
தேசிய காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும், முன்னாள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எஸ்.எல்.எம்.பழீல் (BA) தலைமையில் இடம்பெற்றது.
இந்திறப்பு விழா நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட தேசிய காங்கிரஸின் முதன்மை வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கலந்து கொண்டு புதிய காரியாலயத்தை திறந்து வைத்தார்.
அங்கு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்,
தேசிய காங்கிரஸ் இம்முறை திகாமடுல்ல மாவட்டத்தில் இன்ஷாஅல்லாஹ் கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளையும் வெற்றி கொள்வதோடு,நிச்சயிக்கப்பட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெறுவதற்கு மக்கள் ஆணையை தருவதற்கு முன் வந்துள்ளார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் தமிழ் சகோதரர்கள் தேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்று ஒவ்வொரு நாளும் எம்மோடு இணைந்து கொண்டிருப்பது கூட எம் சமூகத்தின் விடியலுக்கும், இந்த மாவட்டத்தை அமோக அளவில் வெற்றி கொள்வதற்கான வழி வகைகளாகும் என்று முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் பிரதித் தலைவர், கட்சியின் அதியுயர்பீட உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள் மற்றும் கட்சியின் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனையில் தேர்தல் நடவடிக்கை காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது
Reviewed by Editor
on
July 05, 2020
Rating:
Reviewed by Editor
on
July 05, 2020
Rating:





