உடலில் ஈரல் ஒரு முக்கியமான உறுப்பாகும். குழந்தைகளுக்கு ஈரல் பல்வேறு நோய் நிலைகளின் பொழுது செயல் இழக்கின்றது. இதற்கு அனேகமான நேரங்களில் ஈரல் மாற்று சத்திர சிகிச்சையே ஒரே ஒரு தீர்வாகும். இருந்த பொழுதிலும் இலங்கையில் இவ்வளவு காலமும் குழந்தைகளுக்கு ஈரல் மாற்று சத்திரசிகிச்சை நடைபெறவில்லை. இதற்காக பெற்றோர்கள் பல இலட்சங்கள் செலவு செய்து இந்தியா சென்றே இச்சத்திர சிகிச்சையை செய்தனர்.
அதற்கு வசதி இல்லாத பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை காப்பாற்ற முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது. அண்மையில் இவ்வாறான ஒரு குழந்தை உயிரிழக்க நேரிட்டது.
இதற்கெல்லாம் தீர்வாக றாகமை போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஒரு குழந்தைக்கு வெற்றிகரமாக ஈரல் மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இவ் வைத்தியசாலையில் மேற்குறிப்பிட்ட வைத்திய குழாமினால் மொத்தமாக 50 ஈரல் மாற்று சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (வயது வந்தவர்களுக்கு உட்பட)
இச்சிகிச்சை முறையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோடியாக செயற்பட்ட குழந்தைநல வைத்திய நிபுணரான வைத்திய கலாநிதி மெரந்தி பெர்னாண்டோக்கு இலங்கை வாழ் மக்கள் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகவல்- .Dr Vishnu Sivapatham
Consultant paediatrician
Teaching Hospital Batticaloa.
இலங்கையில் குழந்தை நல மருத்துவத் துறையில் மற்றுமொரு மைல்கல்!!!
Reviewed by Editor
on
July 25, 2020
Rating:
Reviewed by Editor
on
July 25, 2020
Rating:
