(றிஸ்வான் சாலிஹூ)
தலை மற்றும் கழுத்து புற்று நோய்க்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் "Akkaraippattu Clinical Society" இனால் வைத்தியர்கள், பல் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான கருத்தரங்கு இன்று (28) செவ்வாய்க்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதான பேச்சாளராக டாக்டர்.எம்.எச்.எம்.அஷ்ரப் (Consultant Craniofacial & Maxillofacial Surgeon - Teaching Hospital Batticaloa ) கலந்து கொண்டு இக்கருத்தரங்கினை நிகழ்த்தினார்.
டாக்டர். ஹபீல் ( RDS - Kalmunai ), டாக்டர்.அப்துல் வாஜீத் ( DDH - Puttalam & Former RDS Kalmunai ) ஆகியோருடன், அக்கரைப்பற்று வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.ஜவாஹீர், வைத்திய நிபுணர்கள், வைத்திய உத்தியோகத்தர்கள், பல் வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள்.
தலை மற்றும் கழுத்து புற்று நோய்க்கான சர்வதேச தினம்' அக்கரைப்பற்றில் அனுஷ்டிக்கப்பட்டது
Reviewed by Editor
on
July 28, 2020
Rating:
Reviewed by Editor
on
July 28, 2020
Rating:



