அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் ஹாசீம் கண்டியில் காலமானார்!!


அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியை பிறப்பிடமாகவும், கண்டி கடுகண்ணாவையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற அதிபர் முஹம்மத் ஹாசிம் இன்று (28) செவ்வாய்க்கிழமை மாலை  கண்டியில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹூம் சீனி முகம்மது மேனஜர் மற்றும் முகம்மது பாத்தும்மாவின் மகனும், மர்ஹூம் முஹம்மத் யூசுப்,
கலாநிதி தீன் முஹம்மத் (பேராசிரியர் கட்டார் சர்வதேச பல்கலைக்கழகம்), முஹம்மத் அமீன், கணக்காளர் நிசாம்,
மர்ஹூம் நியாஸ் ஆசிரியர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் அலாவுதீன் ஆசிரியர், முஹம்மது தையார் (புள்ளிவிபரவியல் அதிகாரி) முன்னவர்‌ ( கிராம நிலதாரி)
தாஹிர் ஆசிரியர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவரின் ஜனாசா நல்லடக்கம் அக்கரைப்பற்றில் நடைபெறும். நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் ஹாசீம் கண்டியில் காலமானார்!! அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் ஹாசீம் கண்டியில் காலமானார்!! Reviewed by Editor on July 28, 2020 Rating: 5