(செய்தியாளர் - றிஸ்வான் சாலிஹூ)
20வருட காலமாக இந்த தேசிய காங்கிரஸின் தலைமை சொல்லி வந்த இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மூலம் தான் எம் தாய் நாட்டில் உள்ள மூவின மக்களும் ஒற்றுமையாக, சகோதரத்துவமாக, ஒருவரை ஒருவர் சந்தேகம் கொள்ளாமல் வாழ முடியும் என்ற கூற்றை சிங்கள மற்றும் தமிழ் சமூகம் தற்போது புரிந்து கொண்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள இந்த சகோதரர்கள் எம் கட்சியோடு இணைந்து கொள்கின்றார்கள் என்று முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட தேசிய காங்கிரஸின் முதன்மை வேட்பாளருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு (24) வெள்ளிக்கிழமை, அக்கரைப்பற்று டீன்ஸ் வீதியில், நகர வட்டார உறுப்பினரும் அக்கரைப்பற்று மாநகர முதல்வருமான அதாஉல்லாஹ் அஹமட் ஸஹீ தலைமையில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
(வீடியோவை அழுத்துங்கள்)
தேசிய காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.சலீம், சட்டத்தரணி மர்சூம் மெளலானா, சட்டத்தரணி கே.சமீம், எம்.எஸ்.எம்.அன்சார், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், நகர வட்டார அங்கத்தவர்கள் மற்றும் கட்சியின் போராளிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று டீன்ஸ் விளையாட்டு கழக அங்கத்தினர்களால் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்களுக்கு ஞாபக சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கள மற்றும் தமிழ் சமூகம் தேசிய காங்கிரஸை ஏற்றுக் கொண்டு எம்மோடு இணைந்து கொள்கிறார்கள்...
Reviewed by Editor
on
July 25, 2020
Rating:
Reviewed by Editor
on
July 25, 2020
Rating:










