9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று...

 

இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (20) வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில்  கூட்டப்படுவதோடு இதன்போது சபாநாயகர், பிரதி சபாநாயகர், அரசாங்க தரப்பின் பிரதம கொரடா , சபை முதல்வர், பாராளுமன்ற தெரிவுக்குழு ஆகிய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ சத்தியப்பிரமாணம் மற்றும் பதவிப்பிரமாணம் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் பாராளுமன்ற ஆவணத்தில் கைச்சாத்திடுவர்  இதன் பின்னர் பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டு மாலை 3 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும்.

இன்று கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வு கொரோனா வைரஸை (Covid-19) கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை பேணி நடைபெறும் எனவும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று... 9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று... Reviewed by Editor on August 20, 2020 Rating: 5