எதிர்வரும் சனிக்கிழமை (22) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாளைய தினம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை பிரதான மின் பரிமாற்ற அமைப்புக்கு தொடர்புபடுத்த உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 18 ஆம் திகதி முதல் நாளாந்தம் ஒரு மணித்தியாலயம் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டு வந்தது.
கடந்த 17 ஆம் திகதி மின் பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின் வெட்டு தொடர்பில் வெளியான விஷேட அறிக்கை
Reviewed by Sifnas Hamy
on
August 20, 2020
Rating:
Reviewed by Sifnas Hamy
on
August 20, 2020
Rating:
